Saturday, July 27, 2013

பயன்திறன்(usability) -3.

இன்னும் இந்திய அரசாங்கத்தின் இணையதளங்கள், மாநில அரசுகளின் இணையதளங்கள் கல்வெட்டு காலத்தில் தான் இருக்கின்றது. அவர்களுக்கு பயன்திறன் குறித்தோ பயனாளிகள் குறித்தோ கவலை இல்லை. ஏனென்றால் பொதுமக்கள் அவர்களை திட்டிக்கொண்டேவாவது அந்த தளங்களுக்கு சென்று தங்களுக்கு தேவையான தகவல் பெற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். வேறு வழி என்றால் அவர்கள் அலுவலகத்திற்கு சென்று வரிசையில் நிற்க வேண்டும். அந்த கொடுமைக்கு இது தேவலை என்பதால் பல்லை கடித்துக் கொண்டு இந்த அரசு இணைய தளங்களின் ஆதிகால டிசைன்களை பொறுத்துக் கொண்டுதான் ஆகவேண்டும். ஆனாலும் இந்தியா இந்த விசயத்தில் ஆக மோசம். மேற்குலக நாடுகளின் ஏன் ஆப்பிரிக்க நாடுகளின் அரசு இணைய தளங்கள் கூட நன்றாக வடிவமைத்து இருக்கிறார்கள். அலட்சியம் என்பது இங்கு தேசிய குணம் என்பதால் இத்தனை அவலட்சணம். 



அமெரிக்காவில் அரசு இணையதளங்கள் இப்படிதான் இருக்க வேண்டும் என்று பெரிய வரைமுறையே இருக்கிறது. ADA - Americans with Disability Act என்பது அதில் குறிப்பிடத்தக்க விதிமுறை. அதாவது பார்வை, கேட்பு திறன் குறை இருப்பவர்களும் பயன்படுத்தும் வண்ணம் அந்த தளங்கள் இருக்க வேண்டும். இல்லையென்றால் ப்ராஜெக்ட் கேன்சல் தான். இதற்காகவே ஒரு கம்பெனி என்னை வேலைக்கு தேர்ந்தெடுத்தார்கள.

இந்திய அரசு என்றில்லை, அவை சார்ந்த நிறுவனங்களின் நிலையம் இது தான். இந்தியாவின் பெருமிதம் என்று சொல்லப்படும் ISRO என்ற விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் தளம் உள்ளிட்ட தளங்களும் இப்படி தான் இருக்கிறது. 98 சதவித அரசு பல்கலைகழகங்களின் நிலையம் இதுவே. ஆனால் அமெரிக்காவில் உள்ள பல்கலைகழகங்கள் மொபைல் அப்ளிகேசன் முதற்கொண்டு எல்லா வகை இணைய வடிவங்களிலும் சிறப்பாக வடிவமைத்திருக்கிறார்கள். அதையும் இங்கே பெங்களூரில் தான் செய்கிறோம்.


பயன்திறன் இல்லாத இந்த அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களின் இணையத்தளத்தினால் பல கோடி ரூபாய் வருடம் தோறும் இழப்பு ஏற்படுகிறது. அதிகப்படியான செலவீனங்கள் கூடுகிறது. எல்லாம் மறைமுக வருவாய் என்பதால் அரசுக்கு அக்கறை இல்லை. கொஞ்சம் புத்திசாலித் தனமாக செயல்பட்டால் கூடுதல் வருவாய் கூட பெற முடியும். செய்ய வேண்டுமே !

என்ன எல்லாம் செய்ய முடியும் என்பதை அடுத்த பகுதியில் காண்போம்

Monday, June 24, 2013

பயன்திறன்( usability) -2 : காசு, பணம், துட்டு, மணி மணி


பில்கேட்ஸ் ஐபிஎம்முக்கு பண்ணிய DOS இல் நல்ல காசு பார்த்துட்டு அடுத்து என்ன பண்ணலாம் என்று யோசிக்கும் போது அவரை கவர்ந்தது ஆப்பிள் மேக் இயக்க மென்பொருள், களத்தில் இறங்கினார். குரு ஸ்டீவ் ஜாப்ஸ் எவ்வழியோ அவ்வழியில். அதாவது டெக்னிசியன்களை இழுப்பது. இழுத்தார் குருவின் ஆப்பிள் நிறுவனத்தில் இருந்தே. இன்னும் கொஞ்சம் ஆட்களை தேற்றி ஒரு GUI இயக்கி கொண்டுவர முயற்சித்தார். வாங்குறதுக்கு ஒரு பெரிய மார்கெட் இருந்தது. அதுக்கும் குருவே காரணம். ஆமாம் ஆப்பிள் கம்ப்யுட்டருக்கு மட்டுமே பொருந்தும் வண்ணம் தான் "மேக்" ஓ.எஸ்  இருந்தது. பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கணினி உருவாக்கும் மற்ற நிறுவன கணினிகள் UNIX / DOS போன்ற எழுத்து வழி கட்டளைகளை கொண்ட இயக்கிகளை மட்டுமே கொடுத்துகொண்டிருந்தார்கள்.

பில்கேட்ஸ் அந்த இடைவெளியை சரியாக புரிந்து கொண்டு அவசர அவசரமாக ஒரு முழுமையற்ற இயக்கியை கொண்டுவந்தார். அது தான் விண்டோஸ். அதை கணினி மார்கெட் கொஞ்சம் கவனித்தது. அடுத்து அவர் வைத்த ஸ்டெப் அருமையான ஒன்று. அது தான் டாஸில் இயங்கிய வோர்ட்ஸ்டார், லோட்டஸ் போன்ற அலுவலகத்திற்கு தேவையான மென்பொருள்களை "வடிவ பயன்பாட்டிற்கு (GUI)" மாற்றினார். அந்த காலகட்டத்தில் வகுக்கப்பட்ட, வடிவமைக்கப்பட்ட வடிவ பயன்பாடு தான் பிற்பாடு வந்த எல்லா கணினி மென்பொருளுக்கும் அடிப்படை டிசைன் விதியாக அமைந்தது எனலாம்.

இரண்டு மூன்று வெளியிடுகளுக்கு பிறகு 1995 இல் விண்டோஸ்95 என்ற பெயரில் ஒரு முழுமையான கணினி இயக்கியை பில்கேட்ஸ் கொண்டு வந்தார். கணினி வன்பொருள் யுகமும் நாலுகால் பாய்ச்சலில் இறங்கியது. பிறகென்ன பில்கேட்ஸ் காட்டில் காசு, பணம், துட்டு, மணி மணி தான். அப்புறம் நடந்த கதை எல்லாம் பரவலாக எல்லோரும் தெரிந்தது தான்.

Usability ஐ பற்றி சொல்ல வந்துவிட்டு கம்ப்யுட்டர் கதை ஏன் சொல்லவேண்டும்.
Usability இல்லையென்றால் இன்று கணினி மக்களிடம் இருந்திருக்காது. அலுவலகங்களிலும், ஆராய்ச்சி கூடங்களிலும் மட்டும் தான் இருந்திருக்கும். அதை உங்கள் கைக்குள் அடக்கும் ஆண்ட்ராயிட் போனாக உங்கள் கைகளில் தவழ  விட்டதில் Usabilityக்கு முக்கிய பங்கு உண்டு.

அதை எங்கிருந்து ஆரம்பிக்கலாம் ? இது தான் விதிகள் என்று Usability ஐ வகுத்துவிட முடியாது. எது தேவையோ அதுவே தர்மம் என்பதைப் போல தான்  விதிகளை வகுக்க முடியும் . இருந்த போதும் சில பொதுப்படையான
 Usabilityஇன் அடிப்படை விதிகளை மென்பொருளின் வடிவாக்க நிலைகளில் ஒரு முறை பார்த்து விடலாம்.

பிளான் : வடிவேலு சொல்வது போல  எதை பண்ணினாலும் ப்ளான் பண்ணி பண்ணனும். இந்த பகுதியில் Architecture Diagram, User Analysis, Wire-Frames என்று பல அயிட்டங்கள் இருக்கிறது

டிசைன் : மென்பொருளின் கண், காது, மூக்கு எல்லாம் அதது அந்தந்த இடத்தில் இருக்க வேண்டும்.அப்போதான் அழகு. அப்புறம் இதெல்லாம் ஏன் அந்த இடங்களில் இருக்கிறது என்பதை நியாயப் படுத்தவேண்டும். தவறென்றால் திருத்த படவேண்டும். இதற்குள் User Interface Design, Prototype போன்ற அயிட்டங்கள் கொஞ்சம் பெரிய ஏரியா. விரிவாக பார்க்க வேண்டிய சுவாரஸ்யமான பகுதி

இன்னும் நிறைய அயிட்டங்கள் லைன்ல இருக்கு. கொஞ்சம் கொஞ்சமா பேசலாம். இப்போ நீங்க சொல்லுங்க உங்களுக்கு ரெம்ப எளிதான இணையதளம் எது , கடினமானது எது ? என்ன காரணம் ?

Friday, June 21, 2013

"பயன"ங்கள் முடிவதில்லை. - கணினி பயன்திறன் குறித்த தொடர் கட்டுரை


Usability எனப்படும்பயன்திறன் பற்றி எங்கிருந்து ஆரம்பிக்கலாம். உங்க காப்பி கப்பில் இருந்து? 
எப்படி ?    
உங்க காப்பி கப்பில் கைப்பிடி ஏன் இருக்கிறது? சூடான கப்ப நேரடியா பிடிக்காமல் இருக்க. சரி தானே. இப்படி நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளின் வடிவமைப்பிலும் இருக்கும் சரியான காரணம் தான் பயன்திறன். எல்லா வடிவமைப்பில் உள்ள பயன்திறன் பற்றி நான் சொல்ல ஆரம்பித்தால் அதற்கு முடிவே இருக்காது. அதை நீங்களே கண்டுபிடியுங்கள். இதை ஏன் இப்படி டிசைன் செய்தார்கள் என்ற கேள்வியை கேளுங்கள். அதற்கு சரியான பதில் இல்லாவிட்டால் இதை ஏன் இப்படி டிசைன் செய்திருக்க கூடாது என்று கேளுங்கள். அதில் அப்பட்டமாக குறை இருந்தால் டிசைன் செய்தவனை மானாவாரியாக திட்டுங்கள் தவறில்லை. உங்களுக்கான பொருளை உங்களை பற்றி, உங்கள் தேவையை பற்றி புரிந்து கொள்ளாமல் டிசைன் செய்தவன் மடையனாகத் தான் இருக்க வேண்டும். நம்ம வள்ளுவர் கூட இப்படி சொல்கிறார் 

நன்றாற்ற லுள்ளுந் தவுறுண்டு அவரவர் 
பண்பறிந் தாற்றாக் கடை

 அவர் அவர் குணநலன்களை அறிந்து செயல் ஆற்றாவிட்டால் நல்லது செய்வதிலும் பிழை நேர்ந்து விடும்


முதன் முதலில் உருவாக்கப்பட்ட மவுஸ்.  

சரி கணினி உலகிற்கு வருவோம். எப்போ இருந்து ஆரம்பித்தது இந்த பயன்திறன். மிக எளிய DOS COMMAND இல் இருந்து தொடங்குகிறது. கணினியுடனான மனித தொடர்பு கீ போர்ட் தான் ஆரம்பத்தில். change disk என்று நீளமான கட்டளையை சுருக்கி cd என்று ஆக்கினார்கள். இதே போல் தான் எல்லா கட்டளைகளும் இரண்டு, மூன்று எழுத்துக்களில் சுருக்கி ஞாபகம் வைத்துக் கொள்ளும் அளவுக்கு சுருக்கினார்கள். இதை எழுதி தான் நம்ம பில்கேட்ஸ் மைக்ரோசாப்ட் என்ற கம்பெனிக்கு "அ"கரம் இட்டார். இன்னொரு புறம் ஒரு குருப் கணினி-மனித தொடர்பில் ஒரு மைல் கல்லை தொட்டார்கள். அது என்னவென்றால் கணினி கட்டளைகளுக்கு வடிவம் கொடுத்தார்கள்.  இப்போ தான் எலி உள்ளே வருகிறது. அதாங்க மவுஸ். எதையும் நீங்க ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. வடிவத்தை வைத்தே புரிந்து கொண்டு  கணினியுடன் தொடர்பு கொள்ளலாம். வடிவமும் அதன் உடன் இருக்கும் பெயரும் சொல்லிவிடும் அது என்ன என்று. my computer, my document, recycle bin, network, download, my picture இதில் உங்களுக்கு குழப்பம் ஏதும் வருகிறதா

Graphical User Interface எனப்படும் "வடிவ பயன்பாடு" என்பது இது தான். இது தொடங்கியதில் ஒரு சுவாரஸ்ய பிசினஸ் கதை உண்டு.  ஆரம்பத்தில் NLS எனப்படும் oNLine System தான் முதல் GUI application கண்டுபிடித்தார்கள். அது உண்மையில் குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்டது. அதனால் தான் எளிதில் கணினியுடன் தொடர்புகொள்ளும் வண்ணம்  மவுஸ் - கர்சர் பயன்பாடு கண்டுபிடிக்கப்பட்டது. வரி வடிவ கட்டளைகள் குழந்தைகளால் ஞாபகம் வைத்துக் கொள்ளமுடியாதல்லவா. இப்படி பிறந்த " கணினி-வடிவ பயன்பாடு" பிறகு Xerox-PARC கம்பெனிகாரர்களால் அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லப்பட்டு Xerox-Alto என்ற கணினியாக வளர்ந்தது. இது பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரவில்லை எனினும் பெரிய அலுவலகங்களிலும், பல்கலைகழகங்களிலும் பயன்படுத்தப்பட்டது.

ஜெராக்ஸ்-ஆல்டோ 


 இப்படியே ஒரு ஐந்து வருடம் போன பின்பு நம்ம ஆப்பிள் ஸ்டீவ் ஜாப்ஸ் கதைக்குள் வருகிறார். அவர் ஆப்பிள் கம்பெனியை தொடங்கி கணினியை பொதுமக்களுக்கு ஏற்றவாறு கொண்டுவர முயற்சிக்கிறார். Xerox-PARC ஐ நோட்டம் விட்டார். அந்த கம்பெனிக்கு தன்னுடைய ஆட்களை factory visit அடிக்க வைத்தார். அந்த கம்பெனி எப்படி இவர்களை அனுமதித்தார்கள் என்று புரியவில்லை. பொடிப் பசங்க பார்த்தா பார்த்துட்டு போகட்டும். இவங்களுக்கு என்ன புரியபோகுது என்று விட்டுருக்கலாம். பிற்பாடு அந்த கம்பெனி ஆட்களையே தம் பக்கம் இழுத்து வந்தார். Xerox-PARC அளவுக்கு இல்லாவிட்டாலும் ஓரளவு நல்ல கணினியை கொண்டுவந்தார்.

ஆரம்பகால "மேக்" இயக்கமென்பொருள் 


அது தான் ஆரம்பம். அப்புறம் நிறைய விசயங்களை இவர்கள் ஆராய்ச்சி செய்து கணினி-வடிவ பயன்பாட்டை இன்னும் எளிமை ஆக்கினார்கள். நல்ல மார்க்கெட் கிடைத்தது. ஸ்டீவ் ஒரு பிடிவாதக்காரர். ஆப்பிள் கம்ப்யுட்டர்களுக்கு மட்டுமே அதன் Mac OS பொருந்தும் வண்ணம் அமைத்தார். அப்போது ஐபிஎம் போன்ற சில நிறுவனங்கள் கம்ப்யுட்டர் தயாரித்தாலும் அதற்கு சரியான "இயக்க மென்பொருள்" OS இல்லை. ஆப்பிள் கம்ப்யுட்டரை அணுகினாலும் அவர்கள் " I am very sorry " என்று சொல்ல, இப்போ தான் கதையில் நம்ம இன்னொரு ஹீரோ பில் கேட்ஸ் வருகிறார். பால் ஆடனுடன் சேர்ந்து DOS என்ற கணினி இயக்க மென்பொருளை கொண்டுவருகிறார். இனிமேல் கணினி உலக கதையில் சூடு பிடிக்க ஆரம்பிக்கிறது. ஜித்தனுக்கு ஜித்தனாக பில்கேட்ஸ் என்ன பண்ணினார்.

( இது தான் என்னுடைய முதல் தொடர் கட்டுரை என்பதால் உங்களின் மேலான கருத்துக்களை  எதிர்பார்கிறேன் )

Monday, October 13, 2008

அன்றாட வாழ்வில் நகைச்சுவை

நமது தினசரி வாழ்கையில் எத்தனையோ நகைச்சுவை காட்சிகளை கண்டிருப்போம். அந்தவகையில் இன்று நான் கண்ட சில நகைசுவை காட்சிகள்.

1. நான் பயணம் செய்த பேருந்தில் , ஆண்கள் இருக்கைகளுக்கு மேலே " ஆண்கள் " என்பதற்கு பதிலாக "திருடர்கள் " என்று இருந்ததை கண்டு அதிர்ந்தேன். அது கிறுக்கல் என்று நினைக்க வேண்டாம். அச்சடிக்கப்பட்ட ஸ்டிக்கர் . சில வினாடிகளுக்கு பிறகு உண்மை புரிந்து சிரித்தேன். " திருடர்கள் ஜாக்கிரதை " என்பதில் " ஜாக்கிரதை" ரொம்ப ஜாக்கிரதையாக கிழித்து விட்டார்கள் யாரோ ஒருவன் ( ஆண் வர்கத்தின் மீது கோபம் கொண்ட ஒருத்தி ) . என்ன கொடுமை சார் ?

2. ஒரு உணவு விடுதியின் வாசலில் " இன்றைய ஸ்பெஷல் " போர்டு . அதில் உள்ள அந்த ஸ்பெஷல் அயிட்டம் " இன்று கடை விடுமுறை" . அந்த கடை விடுமுறை தான் ஸ்பெஷல் அயிட்டம் என்றால் கடை சாப்பாடு எப்படி இருக்கும் ? அங்கே சாப்பிடுவதற்கு சாப்பிடாமலே இருப்பது தான் ஸ்பெஷல் என்று அந்த கடை காரனே ஒத்துகொண்டது போல் ஆகிவிட்டது இல்லையா.


3. இதை பார்த்த பின்பு என் நண்பன் சொன்ன ஒரு ஜோக் ஞாபகத்துக்கு வந்தது. நண்பன் படம் பார்த்து விட்டு வந்த பிறகு நான் கேட்டேன் " படம் எப்படிடா.. இருக்கு. எந்த காட்சி உனக்கு பிடிச்சிருந்தது. " என்று .


அவன் சொன்னான் " மாப்ள படத்துக்கு நடுவுல ஒரு சீன் வந்துச்சு பாரு அது ஒன்னு தான் நல்ல இருக்கு . மிச்சமெல்லாம் வேஸ்ட் " என்றான்.


" அப்படியா"


" ஆமா Intermission - என்று போட்டாம் பாரு அது தான் மாப்ள சூப்பர் சீனு. "


உடன் சென்ற இன்னொரு நண்பன் " இன்னொரு சீன நீ கவனிக்கல . அதை பார்த்த பிறகு தான் எனக்கு உயிரே வந்தது"


" என்னடா சொல்ற "


" ama The End - nu potta piragu thaan enakku uyire vanthichu.."


- இதெப்படி இருக்கு.

Friday, September 26, 2008

படிக்க வேண்டிய கடிதம்

நான் சமிபத்தில் ஒரு சிறந்த இலக்கியவாதியின் கட்டுரையை படிக்க நேர்ந்தேன். ஆனந்தவிகடனில் "துணையெழுத்து " மூலம் ஜனரஞ்சக வாசக வட்டத்துக்கும் அறிமுகமானவர் எஸ் . ராமகிருஷ்ணன் . அவருடைய இணைய தளத்தில் ( www.sramakrishnan.com ) நான் படித்து ரசித்த அந்த கட்டுரையை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.


Saturday, July 12, 2008

சுப்ரமணியபுரம் திரை பாடல் கேட்டேன் . சில பாடல்கள் நம்மை முதல் முறை கேட்கும் போதே ஈர்த்து விடும். அந்த வகையில் சமிப காலத்தில் என்னை மிகவும் கவர்ந்த திரை பாடல் தொகுப்பு என்றால் அது இதுவே.


கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால் .. - இந்த பாடல் மார்கழி மாதத்தின் காலை பொழுதில் பால் வாங்க செல்லும் போது, எதிரில் கோவில் சென்று திரும்பும் அழகு பெண்களின் கண்கள் கடந்து செல்வதை ஞாபகபடுத்துகிறது. பாட்டின் தாளம் இதயத்தை துள்ள வைக்கிறது.


இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் பேச்சில் மட்டும் அல்ல இசையிலும் பக்குவம் தெரிகிறது.