Usability எனப்படும்பயன்திறன் பற்றி எங்கிருந்து ஆரம்பிக்கலாம். உங்க காப்பி கப்பில் இருந்து?
எப்படி ?
உங்க காப்பி கப்பில் கைப்பிடி ஏன் இருக்கிறது? சூடான கப்ப நேரடியா பிடிக்காமல் இருக்க. சரி தானே. இப்படி நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளின் வடிவமைப்பிலும் இருக்கும் சரியான காரணம் தான் பயன்திறன். எல்லா வடிவமைப்பில் உள்ள பயன்திறன் பற்றி நான் சொல்ல ஆரம்பித்தால் அதற்கு முடிவே இருக்காது. அதை நீங்களே கண்டுபிடியுங்கள். இதை ஏன் இப்படி டிசைன் செய்தார்கள் என்ற கேள்வியை கேளுங்கள். அதற்கு சரியான பதில் இல்லாவிட்டால் இதை ஏன் இப்படி டிசைன் செய்திருக்க கூடாது என்று கேளுங்கள். அதில் அப்பட்டமாக குறை இருந்தால் டிசைன் செய்தவனை மானாவாரியாக திட்டுங்கள் தவறில்லை. உங்களுக்கான பொருளை உங்களை பற்றி, உங்கள் தேவையை பற்றி புரிந்து கொள்ளாமல் டிசைன் செய்தவன் மடையனாகத் தான் இருக்க வேண்டும். நம்ம வள்ளுவர் கூட இப்படி சொல்கிறார்
நன்றாற்ற லுள்ளுந் தவுறுண்டு அவரவர்
பண்பறிந் தாற்றாக் கடை
நன்றாற்ற லுள்ளுந் தவுறுண்டு அவரவர்
பண்பறிந் தாற்றாக் கடை
அவர் அவர் குணநலன்களை அறிந்து செயல் ஆற்றாவிட்டால் நல்லது செய்வதிலும் பிழை நேர்ந்து விடும்
| முதன் முதலில் உருவாக்கப்பட்ட மவுஸ். |
சரி கணினி உலகிற்கு வருவோம். எப்போ இருந்து ஆரம்பித்தது இந்த பயன்திறன். மிக எளிய DOS COMMAND இல் இருந்து தொடங்குகிறது. கணினியுடனான மனித தொடர்பு கீ போர்ட் தான் ஆரம்பத்தில். change disk என்று நீளமான கட்டளையை சுருக்கி cd என்று ஆக்கினார்கள். இதே போல் தான் எல்லா கட்டளைகளும் இரண்டு, மூன்று எழுத்துக்களில் சுருக்கி ஞாபகம் வைத்துக் கொள்ளும் அளவுக்கு சுருக்கினார்கள். இதை எழுதி தான் நம்ம பில்கேட்ஸ் மைக்ரோசாப்ட் என்ற கம்பெனிக்கு "அ"கரம் இட்டார். இன்னொரு புறம் ஒரு குருப் கணினி-மனித தொடர்பில் ஒரு மைல் கல்லை தொட்டார்கள். அது என்னவென்றால் கணினி கட்டளைகளுக்கு வடிவம் கொடுத்தார்கள். இப்போ தான் எலி உள்ளே வருகிறது. அதாங்க மவுஸ். எதையும் நீங்க ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. வடிவத்தை வைத்தே புரிந்து கொண்டு கணினியுடன் தொடர்பு கொள்ளலாம். வடிவமும் அதன் உடன் இருக்கும் பெயரும் சொல்லிவிடும் அது என்ன என்று. my computer, my document, recycle bin, network, download, my picture இதில் உங்களுக்கு குழப்பம் ஏதும் வருகிறதா
Graphical User Interface எனப்படும் "வடிவ பயன்பாடு" என்பது இது தான். இது தொடங்கியதில் ஒரு சுவாரஸ்ய பிசினஸ் கதை உண்டு. ஆரம்பத்தில் NLS எனப்படும் oNLine System தான் முதல் GUI application கண்டுபிடித்தார்கள். அது உண்மையில் குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்டது. அதனால் தான் எளிதில் கணினியுடன் தொடர்புகொள்ளும் வண்ணம் மவுஸ் - கர்சர் பயன்பாடு கண்டுபிடிக்கப்பட்டது. வரி வடிவ கட்டளைகள் குழந்தைகளால் ஞாபகம் வைத்துக் கொள்ளமுடியாதல்லவா. இப்படி பிறந்த " கணினி-வடிவ பயன்பாடு" பிறகு Xerox-PARC கம்பெனிகாரர்களால் அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லப்பட்டு Xerox-Alto என்ற கணினியாக வளர்ந்தது. இது பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரவில்லை எனினும் பெரிய அலுவலகங்களிலும், பல்கலைகழகங்களிலும் பயன்படுத்தப்பட்டது.
இப்படியே ஒரு ஐந்து வருடம் போன பின்பு நம்ம ஆப்பிள் ஸ்டீவ் ஜாப்ஸ் கதைக்குள் வருகிறார். அவர் ஆப்பிள் கம்பெனியை தொடங்கி கணினியை பொதுமக்களுக்கு ஏற்றவாறு கொண்டுவர முயற்சிக்கிறார். Xerox-PARC ஐ நோட்டம் விட்டார். அந்த கம்பெனிக்கு தன்னுடைய ஆட்களை factory visit அடிக்க வைத்தார். அந்த கம்பெனி எப்படி இவர்களை அனுமதித்தார்கள் என்று புரியவில்லை. பொடிப் பசங்க பார்த்தா பார்த்துட்டு போகட்டும். இவங்களுக்கு என்ன புரியபோகுது என்று விட்டுருக்கலாம். பிற்பாடு அந்த கம்பெனி ஆட்களையே தம் பக்கம் இழுத்து வந்தார். Xerox-PARC அளவுக்கு இல்லாவிட்டாலும் ஓரளவு நல்ல கணினியை கொண்டுவந்தார்.
அது தான் ஆரம்பம். அப்புறம் நிறைய விசயங்களை இவர்கள் ஆராய்ச்சி செய்து கணினி-வடிவ பயன்பாட்டை இன்னும் எளிமை ஆக்கினார்கள். நல்ல மார்க்கெட் கிடைத்தது. ஸ்டீவ் ஒரு பிடிவாதக்காரர். ஆப்பிள் கம்ப்யுட்டர்களுக்கு மட்டுமே அதன் Mac OS பொருந்தும் வண்ணம் அமைத்தார். அப்போது ஐபிஎம் போன்ற சில நிறுவனங்கள் கம்ப்யுட்டர் தயாரித்தாலும் அதற்கு சரியான "இயக்க மென்பொருள்" OS இல்லை. ஆப்பிள் கம்ப்யுட்டரை அணுகினாலும் அவர்கள் " I am very sorry " என்று சொல்ல, இப்போ தான் கதையில் நம்ம இன்னொரு ஹீரோ பில் கேட்ஸ் வருகிறார். பால் ஆடனுடன் சேர்ந்து DOS என்ற கணினி இயக்க மென்பொருளை கொண்டுவருகிறார். இனிமேல் கணினி உலக கதையில் சூடு பிடிக்க ஆரம்பிக்கிறது. ஜித்தனுக்கு ஜித்தனாக பில்கேட்ஸ் என்ன பண்ணினார்.
( இது தான் என்னுடைய முதல் தொடர் கட்டுரை என்பதால் உங்களின் மேலான கருத்துக்களை எதிர்பார்கிறேன் )

| ஜெராக்ஸ்-ஆல்டோ |

| ஆரம்பகால "மேக்" இயக்கமென்பொருள் |

No comments:
Post a Comment